Sunday, 12 August 2012

சுஷில் குமாருக்கு ரூ. 1.5 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த சுஷில் குமாருக்கு ரூ. 1.5 கோடி பரிசு வழங்குவதாக அரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். மேலும் ஹூடா தனது வாழ்த்து செய்தியில், சுஷில் குமார் அரியானாவுக்கும், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளதாக கூறினார். ரூ. 1.5 கோடி பரிசுடன் சேர்ந்து சோன்பேட் நகரில் மல்யுத்த மையம் அமைக்க சுஷில் குமாருக்கு நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர். 

இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

No comments:

Post a Comment