டெசோ மாநாட்டில், தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு அமைக்க வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னையை ஐ.நா. தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெசோ அமைப்பின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபேற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ( டெசோ) மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.
இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கையில் தமிழ்மொழி அடையாளங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும்.
தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.
No comments:
Post a Comment