Sunday, 19 August 2012

சிறுதொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குழு தொழில் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு பொது வசதி மையம் அமைக்க ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் ஓசூர் பொறியியல் குழுமத்திற்கு ரூ.49.53 லட்சமும், ராணிப்பேட்டை பொறியியல் குழுமத்திற்கு ரூ.68 லட்சமும், கீழப்பாவூர் அரிசி ஆலை குழுமத்திற்கு ரூ.48 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 4 கோடியே, 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் கல்வியியல் மற்றும் நிர்வாக கட்டடம், ரூ.1கோடியே 8 லட்சம் செலவில் தங்கும் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.
இதேபோல் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் போட்டித்திறனை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் பங்களிப்புடன், செயல்பட்டு வரும் சிறு தொழில் நிறுவனங்கள் குழு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பொது வசதி மையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

No comments:

Post a Comment