Sunday, 30 September 2012

தாண்டவம் - திரைபட விமர்சனம்

ஏற்கனவே ‘தெய்வத்திருமகள்’ல அழகியலா கமர்ஷியல் படத்தைத் தந்த டைரக்டர் விஜய்யும், ச்சீயானும் கைகோர்த்த படம்கிறதால இந்தப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
ஹீரோவுக்கான எந்த எதிர்பார்ப்பையும் பில்டப்புகளையும் ஏத்துக்காம தன் கேரக்டருக்கு நியாயம் தர்ர விக்ரம், அமைதியா லண்டன்ல அறிமுகமாகி ஒருத்தனைப் போட்டுத்தள்ற வரை அவர் பார்வையில்லாதவர்ன்னு நமக்குத் தெரியறதில்லை.

அது ஸ்கிரீன்பிளேவோட சுவாரஸ்யம்னா அது நமக்குப் புரிஞ்சதும் பார்வையில்லாதவரா ஏற்கனவே நாம அவரைப் பார்த்திருக்கிற ‘காசி’யை நினைவுபடுத்திடாம இன்னொரு டைமன்ஷன் காட்டியிருக்கிறது நடிப்புல அவர் எல்லா நடிகர்களுக்கும் ‘ச்சீயான்’தான்னு ஒத்துக்க வைக்குது.
சர்ச்சுல பியானோ கலைஞரா வர்ர அவர் கீபோர்டுல ஏறி வர்ர எறும்புக்கும் ஊறு செய்யாம அதை லாவகமா எடுத்து விடற காட்சி சின்ன அதிர்வையும் உணர்ந்துகிற அவரோட நுண்ணறிவையும், பரோபகார உள்ளத்தையும் சொல்லிடுது.



”உங்க அழகு என் கண்ணுக்குத் தெரியலை. ஆனா உங்க நடத்தைல நீங்க அழகில்லாதவங்களா தெரியறீங்க…”ன்னு எமி ஜாக்ஸன் அன்ட் கோவோட விளையாட்டை ரசிக்காம அவர் சொல்ற டயலாக் கொள்ளை ‘அழகு’.

No comments:

Post a Comment