Wednesday, 22 August 2012

டீசல், காஸ், கெரசினுக்கு மானியம் வாபஸ் ஆகாது

டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் மீதான விலை கட்டுப்பாட்டை அரசு கைவிடாது. அவற்றுக்கு மானியம் தொடரும் என்று பெட்ரோலிய துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை மீதான கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளும் திட்டம் அரசிடம் இல்லை. அவற்றுக்கான மானியம் தொடரும். 

டீசல், காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை ஏற்று வருகின்றன. 2011,12ம் ஆண்டில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.1,38,541 கோடி. அதை சமாளிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு பட்ஜெட் மானியம் தவிர, அரசு ரூ.83,500 கோடி நிதி அளித்தது. 

வாள் சண்டையால் 2 நாள்கள் அவதிப்பட்டேன்! - ஸ்ரேயா

படத்துக்காக வாள் சண்டை போட்டதால் கையில் வலி ஏற்பட்டு 2 நாள்கள் அவதிப்பட்டேன் என்றார் ஸ்ரேயா. தமிழ், கன்னடத்தில் உருவாகும் படம் சந்திரா. இதில் ராணி வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. 

கதைப்படி இப்படத்துக்காக களறி சண்டை காட்சியில் ஸ்ரேயா நடிக்க வேண்டும். இக்காட்சியை மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் படமாக்கினர். அப்போது எதிரி படையை சேர்ந்தவர்களுடன் ஸ்ரேயா வாள் சண்டை போட வேண்டும். ஸ்ரேயாவிடம் தரப்பட்ட வாள், அதிக கனமாக இருந்ததாம். கஷ்டப்பட்டு தூக்கி நடித்ததால் கையில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏக் தா டைகர்' தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்து சாதனைப் படத்திருக்கும் சல்மான்கானின் படமான 'ஏக் தா டைகர்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதனால் அந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை 'ஏக் தா டைகர்' படத்தின் ரீமேக்கிற்கு விஜய் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தை தமிழில் இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கப் போகிறாராம்.

இந்தியா அணு ஆயுத நாடாக மாறியதால் உலக நாடுகள் மிரட்டுவது தடுக்கப்பட்டது - தேசிய பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு


அணுகுண்டுகளை கைவசம் வைத்திருந்த வல்லரசு நாடுகள் முன்பு ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது தங்களின் ஆதிக்கத்தை செழித்து வந்தன. அப்போது இந்தியாவும் இந்த மிரட்டல்களை மூன்று முறை சந்தித்தது.
அணு ஆயுதமற்ற உலகம் படைக்க விரும்பிய மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ராஜீவ் ஆக்ச்ன் ப்ளான் கொண்டுவரப்பட்டது. அதன் 24ம் ஆண்டு நினைவாக அணு ஆயுதமற்ற உலகம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

Monday, 20 August 2012

நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு


வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.

Sunday, 19 August 2012

Tata Motors to sell Nano merchandise on Ebay

The country’s largest car maker Tata Motors is planning to sell a range of merchandise through the online shopping portal EBay. The recent tie-up with EBay is a part of the company’s effort to promote the brand Nano among the Indian buyers. The merchandise which will be on sale from Tata Motors includes branded Titan watches and dry-fit T-shirts for men and women. Nano shaped pen drives, mouse, scale models, caps and key-chains.

மிஸ் வேர்ல்டு போட்டி பட்டம் வென்றார் சீன அழகி : இந்திய அழகிக்கு 7,வது இடம்

உலக அழகி பட்டம் வென்ற சீன மாணவி வென் ஜியாவை (நடுவில் இருப்பவர்) படத்தில் காணலாம். 2வது மற்றும் 3வது இடம் பிடித்த வேல்ஸ்சின் ஷோபி (இடது), ஆஸ்திரேலியாவின் ஜெஸிகா (வலது) ஆகியோர் உடன் இருக்கிறார்கள். 

2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.

சிறுதொழில் முனைவோருக்கு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குழு தொழில் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு பொது வசதி மையம் அமைக்க ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் ஓசூர் பொறியியல் குழுமத்திற்கு ரூ.49.53 லட்சமும், ராணிப்பேட்டை பொறியியல் குழுமத்திற்கு ரூ.68 லட்சமும், கீழப்பாவூர் அரிசி ஆலை குழுமத்திற்கு ரூ.48 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 4 கோடியே, 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் கல்வியியல் மற்றும் நிர்வாக கட்டடம், ரூ.1கோடியே 8 லட்சம் செலவில் தங்கும் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

Wednesday, 15 August 2012

உண்ணாவிரதம் முடிந்ததும் கங்கையில் நீராடிய பாபா ராம்தேவ்

கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 9-ந் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். போலீசார் தடுத்து நிறுத்தி, அவரையும் தொண்டர்களையும் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்

இந்நிலையில் பாபா ராம்தேவ் தனது 6 நாள் உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றார். பழச்சாறு குடித்து அவர் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். பின்னர் அவர் உத்தரா கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய ஆதரவாளர்களும் டெல்லியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Monday, 13 August 2012

முதல்வருக்கு புகா‌ர் அ‌ளி‌க்க இணையதள‌‌ம் தொட‌க்க‌ம்

முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.  11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் (நஙந)  மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார். 

ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும்,    முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

இந்தியாவுக்கு சிறந்த ஒலிம்பிக்: முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்தது

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபதக்கம் பெற்று சாதனை படைத்தது. 

இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றதே அதிக பதக்கமாக இருந்தது. முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்து உள்ளது. 

டெசோ மாநாடு வெற்றி என்கிறார் கருணாநிதி!

தனி ஈழம் குறித்து இலங்கைத் தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநாடு வாயிலாக பிரகடனப்படுத்துவோம் என முதலில் அறிவித்து, பின்னர் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை சந்தித்துச் சென்ற பிறகு தனி ஈழம் கோரப்போவதில்லை, ஈழத்தமிழர் மறுவாழ்வு பற்றியே மாநாடு விவாதிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

இப்பின்னணியில் மக்கள் நிரம்பி வழிந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசொவின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை முடித்துவைத்துப் பேசுகையில் கருணாநிதி, ஈழம் இன்னமும் தனது கனவுதான், அதை நிறைவேற்ற தொடர்ந்து போராட இருப்பதாகக் கூறினார்.

மாநாட்டிற்கு வந்திருந்த திமுகவினரும் தனி ஈழம் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Sunday, 12 August 2012

பெட்ரோல் விலை ரூ.3 உயரும் அபாயம்?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.56 அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நட்டத்தை சரி செய்ய பெட்ரோல் விலையை உயர்த்துமாறு கோரி வரும் நிலையில், விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள இந்த விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7 அளவுக்கு விலையை உயர்த்தி 2 மாத காலத்துக்குள் 3 ரூபாயை உயர்த்துவது என்பது மிக மோசான முடிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.

சுஷில் குமாருக்கு ரூ. 1.5 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த சுஷில் குமாருக்கு ரூ. 1.5 கோடி பரிசு வழங்குவதாக அரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். மேலும் ஹூடா தனது வாழ்த்து செய்தியில், சுஷில் குமார் அரியானாவுக்கும், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளதாக கூறினார். ரூ. 1.5 கோடி பரிசுடன் சேர்ந்து சோன்பேட் நகரில் மல்யுத்த மையம் அமைக்க சுஷில் குமாருக்கு நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர். 

இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை


கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூர் கிரானைட் குவாரி முறைகேட்டில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
கிரானைட் ஊழல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றது வருகின்றது. இந்த ஊழல் காரணமாக 14 கண்மாய், 13 கால்வாய், வண்டிப்பாதை, பஞ்சமி நிலங்கள் போன்றவற்றைக் காணவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது, மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஆட்சிக்கு வந்தால் கிரானைட் குவாரி கொள்ளையைத் தடுப்பேன் என்றார். ஆனால் கடந்த ஓராண்டாக அவர் கிரானைட் குவாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஐ.நா. தீர்மானம்: டெசோ

டெசோ மாநாட்டில், தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு அமைக்க வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னையை ஐ.நா. தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


டெசோ அமைப்பின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபேற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ( டெசோ)  மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.


இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இலங்கையில் தமிழ்மொழி அடையாளங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும்.
தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.

Micromax launches A84 Superfone Elite at Rs 9,999!


Micromax is arguably one of the best smartphone manufacturers in India and is continuously offering mobile devices that feature above average specifications and are slotted in a price bracket that cater to the Indian audience.

After unveiling the Superfone A80 Infinity last month, the brand has now launched the Superfone A84 Elite, an Android Gingerbread handset, featuring a 3.97-inch capacitive IPS WVGA display at a price of Rs 9,999.

This handset boasts some pretty nifty features and one of the main attributes of the A84 Superfone Elite is the 1630mAh battery that can handle 5 hours of talk time and 160 hours of standby.