Sunday, 30 September 2012

டி-20 உலகக்கோப்பை-ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி!

இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி சார்பாக டுகார்டி 3 விக்கெட்டுகளும், ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment