Wednesday, 22 August 2012

ஏக் தா டைகர்' தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்து சாதனைப் படத்திருக்கும் சல்மான்கானின் படமான 'ஏக் தா டைகர்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதனால் அந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை 'ஏக் தா டைகர்' படத்தின் ரீமேக்கிற்கு விஜய் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தை தமிழில் இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கப் போகிறாராம்.



தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ரீமேக் படங்களை இயக்கி வெற்றி பெறும் இயக்குநர்களில் ராஜா தான் முதல் இடத்தில் இருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே விஜய்யை வைத்து' வேலாயுதம்'என்ற ஹிட் படத்தையும் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படத்தையும் ராஜா இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற முடிவில் விஜய் இருக்கிறாராம்.

No comments:

Post a Comment