அணுகுண்டுகளை கைவசம் வைத்திருந்த வல்லரசு நாடுகள் முன்பு ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது தங்களின் ஆதிக்கத்தை செழித்து வந்தன. அப்போது இந்தியாவும் இந்த மிரட்டல்களை மூன்று முறை சந்தித்தது.
அணு ஆயுதமற்ற உலகம் படைக்க விரும்பிய மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ராஜீவ் ஆக்ச்ன் ப்ளான் கொண்டுவரப்பட்டது. அதன் 24ம் ஆண்டு நினைவாக அணு ஆயுதமற்ற உலகம் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
அதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர் மேனன் பேசியதாவது:-
அணுகுண்டு சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு அணுகுண்டுகள் வைத்துள்ள வல்லரசு நாடுகளால் இந்தியா மூன்றுமுறை மிரட்டப்பட்டது. இது நாட்டின் போக்கையே மாற்றி அமைக்க முயற்சித்தது. ஆனால் அந்த நாடுகளால் நேரிடையாக அல்லது மறைமுகமாக விடுக்கப்பட்ட மிரட்டல்களை இந்திய தலைவர்கள் எதிர்த்து அதை முறியடித்தனர்.

No comments:
Post a Comment