கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூர் கிரானைட் குவாரி முறைகேட்டில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
கிரானைட் ஊழல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றது வருகின்றது. இந்த ஊழல் காரணமாக 14 கண்மாய், 13 கால்வாய், வண்டிப்பாதை, பஞ்சமி நிலங்கள் போன்றவற்றைக் காணவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது, மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஆட்சிக்கு வந்தால் கிரானைட் குவாரி கொள்ளையைத் தடுப்பேன் என்றார். ஆனால் கடந்த ஓராண்டாக அவர் கிரானைட் குவாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
No comments:
Post a Comment