வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.
அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென் மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து கூட்டமாக வெளியேறினர். அச்சத்தை போக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அஸ்ஸாம், ஒரிஸா உள்ளிட்ட மாநிலத்தவர்கள் வெளியேறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
No comments:
Post a Comment